பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 7 கிலோ நீர்க்கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி முரளி-சுதா (வயது.41) தய்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சுதா ஏற்கனவே குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இந்நிலையில் சுதாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், மருத்துவமறைக்கு சென்றுள்ளார். அப்போ புது சுதாவின் வயிற்றில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நீர்க்கட்டி வளர்ந்து வந்துள்ளது. தொடர்ந்து வயிறு பெரிதாக சுமார் 7 கிலோ அளவிற்கு நீர்கட்டி உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனையை அனுகிய போது பெரும் தொகை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சுதா வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து வலி அதிகாமனதை அடுத்து கடந்த 25ம் தேதி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்ற முடிவு செய்தனர். தொடர்ந்து சுதா மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் சுதாவின் வயிற்றில் இருந்த 7 கிலோ எடையுள்ள நீர் கட்டியை, மருத்துவர்கள் முழுமையாக அகற்றி சாதனை படைத்தனர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து, சுதா நல்ல நிலையில் உள்ளார்.
இந்த தகவலறிந்த தருமபுரி ஊரக நல பணிகள் மற்றும் சுகாதார இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர் ஜெகதீசன், மருத்துவர் சிலம்பரசன், மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், சுதாவின் வயிற்றில் இருந்த 7 கிலோ நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். மேலும் பெரிய, பெரிய மருத்துவமனைகளில் செய்யும் அறுவை சிகிச்சைகளை பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் செய்து வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்து மருத்துவ குழுவினரை பாராட்டினார்.
மேலும் பாலக்கோடு அரசு மருத்துவமணைகளில், இருதய சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அதிநவீன வசதியுடன் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மகப்பேறு மருத்துவர்கள் தீபிகா, அனிதா, மருந்தாளுநர்கள் முருகேசன், முத்துசாமி, செவிலியர்கள் சுதாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.