தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு  நோக்கி புறப்பட்டது.


இந்த பஸ்ஸை டிரைவர் தங்கராஜ் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.  இதில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதேபோல் ஓசூரில் இருந்து பாலக்கோடு வழியாக தர்மபுரி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.  இந்த பஸ்ஸில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இருக்கையில் இடம் இல்லாமல் நின்று கொண்டு வந்தனர். பாலக்கோடு அடுத்துள்ள கோடியூர் சுகர் மில் அடுத்த பாரதி நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென ஆட்டோ ஒன்று வந்துள்ளது.


 அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் தங்கராஜ் பஸ் திடீரென திருப்பி உள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு பஸ்ஸிலும் பயணித்த மாணவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என 110க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


இந்த விபத்தால் அப்பகுதியே களேபரமானது பஸ்ஸுக்குள் ஈடுபாடுகளில் சிக்கியவர்கள் அலறினர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் வழியாக பிற வாகனங்களில் வந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இடுபாட்டில் சிக்கிய காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்ற வாகனங்களில் ஏற்றிக்கொண்டு பாலகோடு மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தர்மபுரி அரசு மருத்துவமனையில் பஸ் டிரைவர் ஜமீர் (30) பள்ளி மாணவர் அன்பரசு (15), லோகேஸ்வரி 17, தீபிகா (14), சுஜிதா (16),  மேகலா( 17 ) உட்பட 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


இதனிடையே விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தர்மபுரி எம்.பி.  வழக்கறிஞர் வழக்கறிஞர் ஆ.மணி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அரசு மருத்துவக் கண்காணிப்பாளர் சிவகுமார்  கேட்டறிந்தனர்.


மாலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி முடிந்து சென்ற மாணவர்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் என பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்து இருக்கிறது. நேரத்தை கணக்கிட்டு பஸ்களை அதிவேகமாக இயக்கியதும் திடீரென ஆட்டோ குறுக்கே வந்ததால் டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்ததும் விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.