தர்மபுரி டவுன் பழைய நீதிமன்ற வளாக கிளைச் சிறை உள்ளது. சிறை சாலை 1906- ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. 46 கைதிகள் அடைத்து வைக்கும் வகையில் இந்த சிறை சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர்.  தர்மபுரி கிளை சிறையில் பெண்கள் தங்க வைக்கப்படுவதில்லை ஆண்கள் மட்டுமே அடைத்து வைக்கப்படுகின்றனர். கொலை குற்றவாளிகளை இங்கு அடைப்பதில்லை 118 ம் ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாத கட்டிடம் ஆக தர்மபுரி கிளை சிறை உள்ளது. கைதிகளுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது.  


மாலை நேரங்களில் அவித்த பயிர் வகைகள் வழங்கப்படுகிறது. கைதிகள் படிக்க தினமும் நாளிதழ்கள் உலக நிகழ்வுகள் தெரிந்து கொள்ள டிவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.  கைதிகளின் குறைகள் அவ்வப்போது கேட்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகிறது.  தினசரி அரசு மருத்துவர் சிறைக்கு சென்று கைதிகளிடம் உடல் நலம் விசாரிக்கிறார்.  உடல் நலம் குறைவாக இருந்தால் அங்கேயே பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.  சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நேரில் பார்க்க அனுமதி இல்லை. 46 பேருக்கு மேல் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அனுமதி இல்லை.  


தர்மபுரி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் சேலம் மற்றும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைக்கப்படுகின்றனர். இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகிறது ஒரு கைதியை சேலத்தில் இருந்து அழைத்து வந்து தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் கொண்டு செல்ல சுமார் 500 வரையிலும் செலவாகிறது.


 இச்சலவை குறைக்கவும் வீண் அலைச்சலை தவிர்க்கவும் தர்மபுரி சோகத்தூர் ரவுண்டானா பதிக்கால் பள்ளம் அருகே ஆர் டி நகர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆறு ஏக்கரில் தர்மபுரி மாவட்ட சிறைச்சாலை கட்டப்பட்டது.  கடந்த நான்கு ஆண்டுகளாக கைதிகள் இந்த மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த புதிய சிறையில் 250 கைதிகள் வரை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 129 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.  


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  சிறையின் பாதுகாப்பு குறித்தும் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் நிலவரம் குறித்தும் என்ன வழக்கு தொடர்பான கைதிகள் அடைக்கப்படுகின்றனர்  என்பது குறித்து கேட்டறிந்தார்.  மேலும் பதிவேடுகள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.  சுமார் அரை மணி நேரம் ஆய்வுக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனே இருந்தனர்.