தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நல்லம்பள்ளி, பென்னாகரம், காரியமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், ஏரியூர் ஆகிய ஒன்றிங்குகளில் 1575 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் தர்மபுரி அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் மட்டும் 1165 தொடக்கம் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

Continues below advertisement

 இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1246 ஆசிரியர்களுக்கு நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி கையெடுக்க கணினிகளை வழங்கினார்.

 இதேபோல் அரூர் தொடக்க  கல்வி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி வழங்கப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி கல்வி மாவட்ட தொடக்க கல்வியாளர் மான்வழி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மாண்வெளி கூறியதாவது:-

Continues below advertisement

 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினியை பயன்படுத்தி மாணவர்கள் கற்றல் நிலை அறிதல், மதிப்பீடுகள் செய்தல், எமிஸ் பணிகளை மேற்கொள்ளுதல், கிராமப்புறங்களில் இணையதள முறையை எளிதாக மேற்கொள்ளுதல், தமிழக கல்வித்துறை யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து செயலிகளையும் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலையினை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 தனிப்பட்ட வளர்ச்சிக்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொகுப்புகளை பயன்படுத்த முடியும். ஆசிரியர்கள் கையடக்க கணினிகள் மூலம் பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளலாம். ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை எளிதாக எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும்.

 ஆசிரியர் ஒரே பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க மின் கற்றல்  முறையை பயன்படுத்தலாம். இதனால் தனிப்பட்ட அணுகுமுறை வழங்குகிறது. இது கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஒருங்கிணைக்க உதவும் மாணவர்களின் கற்றல் விளைவுகளில் நேர்மையான மாற்றத்தை கொண்டுவர உதவுகிறது.

 தர்மபுரி அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 2000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.