Hogenakkal: 'நிரம்பி வழியும் ஒகேனக்கல்” ... கரைபுரண்டு ஓடும் காவிரி நீர் - விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி..!

வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு-17-வது நாளாக தொடரும் தடை.

Continues below advertisement

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கிளை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, நுகு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Continues below advertisement

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபினியில் 30,000, கிருஷ்ணசாகர் அணையில் 1.30 இலட்சம் கன அடி என  இரண்டு அணைகளிலும் சேர்த்து வினாடிக்கு 1.60 லட்சம் கன அடி தண்ணீர், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒகேனக்கல் பகுதிகளில் பாறைகள், அருவிகள் தெரியாத அளவிற்கு தண்ணீரில் மூழ்கி வெள்ளைக் காடாய் காட்சியளித்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால், தமிழகத்திற்கான நீர்திறப்பு முற்றிலுமாக குறைக்கப்பட்டு, வினாடிக்கு 41,000 கன அடியாக திறக்கப்பட்டது.

வயநாட்டில் தொடரும் கன மழை

ஆனால் மீண்டும் கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்ததால், கேரள மாநிலம், வயநாட்டில் கன மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 இந்த நிலையில் மீண்டும் கபினியில் 80,000 மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணையில் 1.40 இலட்சம் மற்றும் நுகு உள்ளிட்ட இருந்து,  தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2.40 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை வினாடிக்கு 75,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.25 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒரு லட்சம் அடிக்கு மேல் தண்ணீர்

இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 17-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்து வருகிறது. 

வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதே போல் அதிகப்படியான வெள்ளம் வரும் என்பதால், காவேரி கரையோரப் பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதியில் அரசு பள்ளி, தனியார் மண்டபம் என பொதுமக்களுக்கான தங்குவதற்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 

மேலும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கான நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று திறக்கப்பட்ட 2.40 லட்சம் கன அடி தண்ணீரும் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூருக்கு காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவும் கூடுதலாக்கப்பட்டுள்ளது

Continues below advertisement
Sponsored Links by Taboola