தர்மபுரி முதல் தானிப்பாடி வரையிலான இரு வழி மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி மும்பரமாக நடந்து வருகிறது.


 தமிழகத்தில் பிரசித்தி பெற்ற புண்ணிய திருத்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை இங்குள்ள அண்ணாமலையை  தரிசிக்கவும், பௌர்ணமி அமாவாசை தினங்களில் மலையை கிரிவலம் செய்யவும் தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். 


தர்மபுரி மாவட்டத்திலிருந்தும் மாதந்தோறும் கிரிவலத்திற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதனை ஒட்டி விழாக்கால சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.


 தர்மபுரியில் இருந்து மொரப்பூர் அரூர் தீர்த்தமலை தானிப்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு பஸ் மற்றும் காரில் செல்வதற்கு சுமார் மூன்று அரை மணி நேரம் பயண நேரமாக உள்ளது. இந்த சாலை இருவழி சாலையாக இருப்பதால் விழா காலங்களில் போக்குவரத்து அதிகரிப்பதோடு அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது.


முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த சாலை திட்டம்


 இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகத்தில் தரமான சாலைகளை உருவாக்கும் விதமாக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


 இத்திட்டத்தின் கீழ் 410 கோடி மதிப்பீட்டில் சாலையை விரிவாக்கம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரூர் வழியாக செல்லும் தானிப்பாடி இடையிலான நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி கடந்த 2002 ஆம் ஆண்டு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு மற்றும் வேளாண் அமைச்சர் எம் .ஆர். கே.பன்னீர்செல்வம் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. 


தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையத்திலிருந்து மொரப்பூர் வழியாக செல்லும் அரூர் வரைவிலான  இருவழிச் சாலை முதற்கட்டமாக 33.20 கிலோமீட்டர் நீளத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து முதல்வர் மு. க. ஸ்டாலின் விரிவாக்கப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


எச்சரிக்கை பலகையை பொருத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்


  நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்து எச்சரிக்கை பலகை வளைவுகள் குறித்த எச்சரிக்கை போர்டுகள் ஒடசல் பட்டி கணவாய் பகுதியில் சாலை வளைவுகள்  குறித்த போர்டுகள், பள்ளிகள் சாலை சந்திப்பு ஸ்பீடு பிரேக்கர் விபத்து நடக்கும் பகுதிகள் ஆகியவை குறித்து போர்டுகள் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


இதே போல் தானிப்பாடி முதல் திருவண்ணாமலை இடையிலான நெடுஞ்சாலையில் 15 .20 கி.மீ தொலைவிற்கு இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


 அதன்படி தர்மபுரியிலிருந்து தானிப்பாடி வரையிலான நெடுஞ்சாலையில் மொத்தம் 48.40 கிலோமீட்டர் தொலைவிற்கு 410 கோடி மதிப்பீட்டில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.


 இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில்:-


 தற்போது தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்கள் அதிக நேரம் பயணம் செய்யும் நிலை மாறி. தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் முடிவுற்றது. இந்த சாலையில் வாகனங்கள் திருவண்ணாமலைக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் சென்று அடைய முடியும் என்றனர்.