போதை மனங்களை சிதைத்து மனித இனத்தையே அழித்துவிடும் பேராபத்து கொண்டது. போதை பொருட்கள் நமது ஆற்றலை அடியோடு சிதைத்து விடும்.


 போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவர் தனது  கட்டுப்பாட்டில் இருக்க முடியாது. இதனால் அவர் சுயமாக சிந்திக்கவும் முடியாது. இப்படி மனிதர்கள் மனதை சிதைக்கும் போதை பொருட்கள்  கடுமையான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குகிறது.


 இவ்வகையில் மனிதர்களுக்கு எமனாக மாறி நிற்கும் போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. இது நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உள்ளது. 


இதை கருத்தில் கொண்டு போதைப் பொருட்களின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இதற்காக சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.


 இந்த வகையில் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி இன்று சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச ஆய்வுகளின் படி உலகம் முழுவதும் 30 கோடி பேர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்.


 சிகரெட், மதுவும் முதலில் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. அதன்பிறகு கஞ்சா, கொக்கின், பிரவுன் சுகர், ஹேராயின், அபின், புகையிலை ஒயிட்னர் என்று பல்வேறு போதை பொருட்கள் மனிதர்களின் வாழ்வை சீரழிக்கிறது.


 இந்தியாவை பொருத்தவரை மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-


 சமீபத்திய ஆய்வுகளின் படி இந்தியாவில் போதைக்கு அடிமையானவர்கள் 62.5% மக்கள் மதுவை பயன்படுத்துகின்றனர். 8.75% பேர் கஞ்சாவை உபயோகிக்கின்றனர். 0.6 சதவீதம் பேர் மயக்க மருந்துகள் அல்லது ஹிப்னாட்டிக் களை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளது. 


இப்படி போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களில் 26 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைக்கு தேவைப்படுபவர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா, பான் மசாலா, குக்கா பழக்கத்திற்கு மாணவர்களும் கூலித் தொழிலாளர்களும் அதிக அளவில் அடிமையாக இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.


 இதில் சிலர் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது என்ற உற்சாகமூட்டி வருகின்றனர். தளர்ச்சி ஏற்படும் நினைவாற்றல் குறையும் முடிவெடுக்கும் திறன் இருக்காது இந்த நிலை தொடர்ந்தால் மனநலம் பாதிப்பு என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.


 இதை பயன்படுத்துவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் எளிதில் தொற்றிக் கொள்கிறது என்பதற்கு விளக்கம் தேவை இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் உலக அளவில் நாலாவது இடத்தில் இருக்கிறது.


 உலகின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் வாய் புற்று நோயால் இற க்கிறார் என்பது ஆய்வுகள் வெளியிட்டு அதிர்ச்சி தகவல் இதில் தமிழகத்தில் இளைஞர்களும், தொழிலாளர்களும் இந்த பழக்கத்திற்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர்.


 கலைப்பையும், உடல்வலியும் தவிர்க்க இது போன்ற போதை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எளிய தீர்வு என்று நம்புகின்றனர். ஆனால் அதை தொடர்ந்து உண்பதால் முதலில் சளி இருமல் பாதிப்புகளும் பின்பு கல்லீரல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனால் சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகிறது.


 இது ஒரு கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும் கடைசியில் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை சந்தித்து முடிவில் விரக்தியின் உச்சத்திற்கே செல்கின்றனர்.


 எனவே இது போன்ற அபாயங்களை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும் போலீசார் அதிரடியாக செயல்பட்டு இவற்றின் விற்பனையை தடுத்து நிறுத்தும் நிலையில் அவற்றை உட்கொள்ளக் கூடாது என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.


 இதன் மூலமே அடுத்தடுத்த சந்ததிகள் சந்திக்கப் போகும் பெருத்த நோய் அபாயங்களுக்கு முடிவு கட்ட முடியும் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்