உலக அளவில் ஒரு நாளில் கப்பல் போக்குவரத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகம் சாமானியர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட கப்பல் வர்த்தகம் தடைபட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை சூயஸ் கால்வாயின் குறுக்கே தற்போது சிக்கியுள்ள எவர்க்ரீன் சரக்கு கப்பல் தெளிவாக உணர்த்தியுள்ளது.
சுமார் 1300 அடி நீளமும் 2 லட்சம் மெட்ரிக் டன் எடையும் கொண்டதுதான் எவர்க்ரீன் சரக்கு கப்பல். தைவான் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் எவர்க்ரீன் மெரைன் கார்ப் நிறுவனத்தின் இந்த சரக்கு கப்பல், கடந்த செவ்வாயன்று (மார்ச் 23) புகழ்பெற்ற சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியது. கடுமையான சீதோஷ்ண நிலையின் காரணமாக கால்வாயின் குறுக்கே அக்கப்பல் சிக்கியது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">NEW - Armada of tugboats is now trying to move the huge container ship that is still stuck in the Suez Canal.<a >pic.twitter.com/QVwD5Icg6C</a></p>— Disclose.tv 🚨 (@disclosetv) <a >March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
நெதர்லாந்தின் துறைமுக நகரான ரோட்டர்டாமிற்கு சீனாவில் இருந்து புறப்பட்டது இந்த கப்பல். கடந்த 5 நாட்கள் தொடர்போராட்டத்திற்கு பிறகும் இன்றளவும் அந்த கப்பலை மீட்கமுடியாமல் பணியாளர்கள் போராடி வருகின்றனர். மேலும் எகிப்தில் தற்போது புயல்காற்று வீசிவருவதால் கப்பலை மீட்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.
கால்வாயின் நடுவே சரக்கு கப்பலொன்று சிக்கியுள்ளதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மேற்கொண்டு பயணத்தை மேற்கொள்ளமுடியாமல் தவித்து வருகின்றது.