இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,75,190-ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் ஏற்கெனவே 664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 739-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக இன்று 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,650-ஆகவும், தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,318-ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 8,51,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.