Anchor DD : டிடி வீட்டிலே ரொம்ப சைலன்ட்...டிடி பற்றி வெளிவராத தகவல்கள்... 


நான் டிடி மாதிரி ஆங்கர் ஆகணும்னு நிறைய பேர் சொல்லி நாம் கேட்டு இருப்போம். அந்த அளவிற்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அவருக்கென்று ஒரு தனி ட்ரெண்ட் செட் செய்துவைத்தவர் டிடி. 


பிடி பேட்டி :


சமீபத்தில் டிடி சகோதரியும் நடிகை மற்றும் நடன ஆசிரியராக இருக்கும் பிரியா தர்ஷினி ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் டிடி குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பற்றி பகிர்ந்துள்ளார். டிடி - பிடி என செல்லமாக அழைக்கப்படும் இந்த சகோதரிகள் இருவருமே சிறு வயது முதல் திரையில் பிரபலம். தனது சகோதரியை பின் தொடர்ந்து டிடி வந்தாலும் அவருக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர். டிடி பற்றி நமக்கு தெரியாத சில தகவல்களை பகிந்து கொண்டார், தனியார் நிறுவன சேனலுடன்  பிடி என்ற பிரியதர்ஷினி.



டிடி எப்படினு தெரியுமா?


டிடிக்கும் எனக்கும் சண்டை வரவே வராது. எங்கள் குடும்பத்தில் அது போன்ற ஒரு பேட்டர்ன் கிடையவே கிடையாது. ஆனால் அதற்காக நாங்கள் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..." என்று எல்லாம் பாடி கொண்டு இருக்க மாட்டோம். ஆனால் பெரிதாக சொல்லும் அளவிற்கு எந்த ஒரு சண்டையும் இதுவரையில் வந்ததில்லை. டிடியின் வளர்ச்சியை கண்டு எங்கள் குடும்பம் முழுவதுமே பெருமை படுகிறது. சினிமாவில் எளிதாக நடித்துவிடலாம். ஆனால் சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த மாதிரி இருப்பது மிகவும் கடினம். அந்த வகையில் டிடியின் கடின உழைப்பால் இன்று அவள் கொண்டப்படுகிறாள் என்றார் பிரியதர்ஷினி. 


டிடி ஒரு சிறந்த நடிகை:


டிடி ஒரு சிறந்த ஆங்கர் அதை யாராலும் மறுக்கவே முடியாது ஆனால் அவள் ஒரு சிறந்த ஆக்டர். ஆனால் அவளின் நடிப்பு பெரிதாக வெளிப்படவில்லை. என்னை போலவே அவளும் ஒரு சிறப்பாக நடனம் ஆடுவார். அவளின் நடிப்பும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். டிடியின் மற்ற ரசிகர்களை விடவும் நாம் அவரை மிகவும் மதிக்கிறேன் என்றார் பிரியதர்ஷினி.


நெகடிவிட்டி பற்றி:


எவரானாலும் புகழ் ஒருபுறம் இருந்தாலும் நெகடிவிட்டியும் மறுபுறம் இருக்கும். அதை எப்படி டிடி எதிர்கொள்கிறார். வருத்தமே இருக்காது என்று சொல்ல முடிந்து. சில சமயங்களில் மனம் வருத்தப்படும் ஏனென்றால் ஒளியை காட்டிலும் ஒலிக்கு சக்தி அதிகம். அது நிச்சயம் மனதை பாதிக்கும். அதற்காக நாம் கவலை பட்டு கொண்டு இருந்தால் நம்மால் வாழ முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை. நெகடிவ்வாக பேசுபவர்கள் பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ என்று நினைத்து அடுத்ததிற்கு நகர வேண்டியது தான் என்றார் பிரியதர்ஷினி.


தன்னம்பிக்கையின் மறுபெயர் டிடி:


டிடி தன்னம்பிக்கையோடு பிறந்தவள். மற்றவர்களை எளிதாக இன்ஸ்பையர் செய்து விடுவாள். அவளை சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வாள். யாரையும் புண்படுத்தமாட்டாள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் இருந்து எளிதில் மீண்டு வந்துவிடும் ஆற்றல் கொண்டவள். பேட்டிகளில் அவளின் எந்த ஒரு விம்சனமும் மற்றவர்களை காயப்படுத்தாது . அவர்களே சிரிக்கும் படி தான் இருக்குமே தவிர கஷ்டப்படுத்தாது. திரையில் கலகலப்பாக இருந்தாலும் வீட்டில் டிடி கொஞ்சம் சைலன்ட் தான் என்றார் டிடியின் சகோதரி பிரியதர்ஷினி.