கோவையில் கடும் வெயிலில் பணி புரியும் காவலர்களுக்கு தினமும் இளைஞர்கள் சிலர் பழங்களை வழங்கி வருகின்றனர். 


தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் என்பது அதிகரித்து காணப்படுகிறது. கோவையிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடும் வெயில் காரணமாக மதிய நேரங்களில் பெரும்பாலனோர் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதேசமயம் இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்துக் காவலர்கள் வெயிலில் நின்று தங்களது பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரத்தில் கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு 400 கிராம் எடை கொண்ட பழங்களை தினந்தோறும் வழங்கி வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பிற்காக கோவை வந்த இவர், தற்போது படிப்பை முடித்து விட்டு சாப்ட்வேர் டெவலப் சொந்தமாக செய்து வேலை பார்த்து வருகிறார். சிறு வயதில் இருந்து சமூக சேவை பணியில் ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சியாக வெயிலில் போக்குவரத்தை சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்களின் உடலை குளிர வைக்கும் விதமாக கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்கள் இடத்திற்கே சென்று 400 கிராம் எடை கொண்ட நெல்லிக்காய், தர்பூசணி, அண்ணாச்சி பழம், பப்பாளி, கேரட், வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்களை ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். 


இது குறித்து கார்த்திக் கூறும் போது, ”கோவையில் கடும் வெயிலில் வெயிலை பொருட்படுத்தாமல் பணி புரியும் போக்குவரத்து காவலர்கள் 90 பேருக்கு இந்த பழங்கள் கொடுத்து வருகிறோம். எனது நண்பர்கள் 10 பேரும் உதவி செய்வார்கள். நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் செலவாகும். யாரிடமும் நாங்கள் பணம் கேட்பதில்லை. எங்களுடைய நண்பர்கள் மூலமாக உதவி செய்து வருகிறோம். காவலர்களுக்கென ஒரு நாளைக்கு 4 மணிநேரம் இந்த வேலையை செய்கிறோம். சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தாலும், இது போல் ஒரு சேவையை மேற்கொண்டால் தம்மை பார்த்து மற்றவர்களும் சேவை பணியை தொடர்வார்கள் என நம்பிக்கையோடு பணியை மேற்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். படிப்பிற்காக வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களை இணைத்து தன்னலமற்ற சேவை பணியை செய்து வரும் இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர்களுது சேவையை பாராட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கார்த்திக்கை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண