நீலகிரி: ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

“முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை"

Continues below advertisement

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பதை அறிய, உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பினர். 

Continues below advertisement

இந்நிலையில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக காட்டுப் பன்றிகள் உயிரிழந்து இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், வனத்துறை அதிகாரிகள் தெப்பக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதில் 26 காட்டுப் பன்றிகள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல்கள் அங்கேயே தீயிட்டு எரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவலை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு குறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில்,  “முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை. வனப் பணியாளர்கள் குழுக்களாக சென்று வனப்பகுதியில் உள்ள புதர்களில் காட்டுப் பன்றிகள் உயிரிழந்துள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.
தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளதால் அதற்குள் காட்டுப் பன்றிகள் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வளர்ப்பு பன்றிகள் இல்லாததால், அது மற்ற இடங்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், ”கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடக்க உள்ளது” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola