கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார். கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் வைத்து இந்த திட்டத்தை துவக்கி வைத்த அவர், முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ குழு உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணை வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம். கோவிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களை பெற்று தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊரிலும் கல்வி சாலையை போல் கோவில்களும் முக்கியம். நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில் பூஜை முறைகளிலிருந்து விலகி செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கெரியாமல் இருக்க கூடாது என்பதற்காக இப்பணியை துவங்கியுள்ளோம். வரக்கூடிய காலங்களில் இந்த திட்டம் மற்ற கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தீப ஒளியைப் போல இந்த தொகுதி மக்களின் வாழ்விலும் ஒளி உண்டாகும்” எனத் தெரிவித்தார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமை இன்று வெளியிட்ட ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாகி உள்ளது. தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார். எதையும் சந்திக்க தயார் எனக் கூறி திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுகவினர் கூறியுள்ளனர். அதன்படி நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார். அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, “வாட்சி பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? பில் கேட்டீர்கள். பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனப்  பதிலளித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண