தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தன்னுடைய அரசியல் எதிரி தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக-தான் என்று சொன்னதோடு, தன்னுடைய விக்கிரவாண்டி மாநாட்டு மேடையிலேயே திராவிட மாடல் ஆட்சியை பற்றி சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார்.

கோவை சென்ற அமைச்சர் மா.சு – மருத்துவமனையில் ஆய்வு

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், கோவைக்கு சென்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்த அவர், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்களை கனிவாக நடத்தி, மருத்துவம் பார்க்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

செய்தியாளர் சந்திப்புக்கு தயாரான அமைச்சர் – த.வெ.க. கொடி இருந்ததால் அதிர்ச்சி

இதனையடுத்து அங்கு அவர் செய்தியாளர்களை சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. செய்தியாளர்கள் மைக் வைக்கும் டேபிளின் மேல் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கொடியை ஒத்த ஒரு துணி போடப்பட்டிருந்தது. இதனைக்கண்ட மருத்துவமனையின் நிர்வாகிகள் பதறியபடி அந்த துணையை எடுக்க ஆணையிட்டனர்.

உடனடியாக அங்கிருந்து மருத்துவமனை ஊழியர்கள் அந்த டேபிளில் போடப்பட்டிருந்த விஜய் கட்சியை கொடியையொத்த துணையை சரசரவென உருவி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.