1. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் விதித்த கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர்த்த அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  2. கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று குறைந்த நிலையில், 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

  3. கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், எலக்ட்ரானின் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கோவை மாவட்டத்தில் 54 சதவீதம் குறைவாக பெய்த்துள்ளது என காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு சராசரி அளாவன 210 மில்லி மீட்டர் அளவுக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படட் நிலையில், 97 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

  5. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் நடந்த இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனயில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

  6. காவல் துறையினர், பொது மக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த ஆலோசணைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

  7. பெரியாரின் 143-வது பிறந்த நாள் இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு அமைப்பினரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

  8. நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

  9. கோவை மாவட்டம் விராலியூர் பகுதியில் காட்டு யானை தாக்கி சின்னசாமி என்ற விவசாயி உயிரிழந்தார். மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேர காவலுக்கு சென்றபோது, காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

  10. பெண்களுக்கு எதிரான குறைவான குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. இந்த தகவலை என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ளது.