கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் நிலையில், மின் வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 காட்டு யானைகள் உயிர் தப்பின.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. மருதமலை வனப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். 


தற்போது யானைகளின் வலசை காலம் துவங்கியுள்ளதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப்பகுதிக்குள் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கொண்ட கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது. அதில் 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அசாம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மின் இணைப்புகளை துண்டித்தனர். 




இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த அவர்கள் மின் நிலைய வளாகத்தில் இருந்து யானைகளை வெளியே விரட்டினர். தொடர்ந்து அந்த யானைகள் மருதமலை வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 யானைகளின்  உயிர் காப்பாற்றப்பட்டது சூழலில் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண