கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 436 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 22 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை 2992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 952 பேராக உயர்ந்துள்ளது. இன்று கோவையில் மற்ற மாவட்டங்களை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2076 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் தொற்று விகிதம் 4.2 ஆக உள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 330 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 3 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90957 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86268 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 609 ஆகவும் உயர்ந்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 217 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 234 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 83886 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81448  ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 773 ஆகவும் உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 74 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று 19 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 69 பேர் குணமடைந்துள்ள நிலையில், 850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஆறு நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28771 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27756ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 165 ஆகவும் உள்ளது.


கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோவை மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.