கோயம்புத்தூரில் உள்ள அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 


தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டுமே தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது. எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.


இது தொடர்பாக, அரசு விளக்கமளித்துள்ளதில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். 1,630 ஏக்கர் மட்டும் கையகப்படுத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.இங்கு காற்று மற்றும் நிலத்தடி நீரை மாடுப்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும்,.