கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கியச் செய்திகள் சில...
ஒரிஜினல் ‛சாமி’ போலீஸ் அர்ஜுன் சரவணன் உளவுத்துறை எஸ்.எஸ்.பியாக நியமனம்!
'போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
கோவை மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளராக கலையரசி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பாக கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர். இந்நிலையில் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த போது பல்வேறு நிறுவனங்கள் மீது ஏராளமான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட மோசடி நிறுவனங்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல், மிகவும் காலம் தாழ்த்துவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும், பொது மக்களுக்கு பாதகமாகவும் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமிக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்தது. இதனையடுத்து இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பொருளாதார குற்றப் பிரிவில் இருந்து கலையரசி தீவிர குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆய்வாளர் கலையரசி பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த போது குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கலையரசி மீதான புகார்கள் குறித்த விசாரணை அறிக்கையை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமியிடம், காவல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில் காவல் துறையினர் அளித்த அறிக்கையின் படி, கலையரசி முறையாக பணி செய்யாமல் இருந்தது உடன், மோசடி நிறுவனங்கள் மீது பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் மிகவும் கால தாமதமாகவே வழக்கு பதிவு செய்ததும், சில நிறுவனங்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து முறையாக பணி செய்யாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட ஆய்வாளர் கலையரசியை இன்று பணியிடை நீக்கம் செய்து, மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் கலையரசி சமீபத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/2TMX27X
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
https://bit.ly/3AfSO89
ட்விட்டர் பக்கத்தில் தொடர
https://bit.ly/3BfYSi8
யூடிபில் வீடியோக்களை காண
https://bit.ly/3Ddfo32