கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு ; தொடரும் பதற்றம்

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், 5 வது நிகழ்வாக இந்நிகழ்வு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசினர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

Continues below advertisement


கோவை பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக மோகன் என்பவர், காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடையில் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில பிளைவுட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் கார் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோடாரியால் உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தியாகு என்ற இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரின் காரின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர்.


கோவையில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இரண்டு இடங்களில் கார்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பள்ளது. சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. மக்களிடையே பதட்டத்தை தணிக்கும் வகையில், காந்திபுரத்தில் அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.


கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உப அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக - கேரள பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றிரவு ஒன்பது முப்பது மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், 5 வது நிகழ்வாக இந்நிகழ்வு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களுக்கும், அச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்ததை அடுத்து, 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola