நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மோர் பாளையம் பகுதியில் வசிக்கும் மில் தொழிலாளியான தீபாவுக்கு இவருக்கு  நந்திதா மற்றும் சௌபர்ணிகா என இரண்டு மகள்களும் தீபாவின் சகோதரிபரிமளத்திற்கு  சௌமியா என்ற ஒரு மகளும்  உள்ளனர்.  குழந்தைகள் மூவரும் ராசிபுரம்  அரசுப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மூவரும் வீட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்ற எண்ணத்தில் தேங்காய் நார் மூலம்   குருவி கூட்டை உருவாக்கி உள்ளனர். அந்த கூட்டை வீட்டின் முன் மாட்டி வைத்தனர்.  குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. கொரோனா ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக வறுமையில் பெற்றோர் வாடுவதால் பெற்றோருக்கு உதவியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று சிந்தித்த குழந்தைகளுக்கு குருவிக்கூடு தயாரித்து விற்பனை செய்யலாம் என்ற யோசனை தோன்றியது.



 இதனையே தொழிலாக செய்ய முடிவெடுத்து மூவரும் இணைந்து தேங்காய் நார் மற்றும் நூல்கண்டு அட்டை பெட்டிகள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றை வைத்து விதவிதமான குருவி கூடுகளை தயாரித்து வீட்டின் அருகே உள்ள மெயில் ரோட்டின் ஓரம்  வைத்து விற்பனை செய்தனர். மாணவிகள் தயாரித்த குருவிக்கூடுகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.  குருவி கூட்டை வாங்கிச் சென்றவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ததால் குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான குருவிக்கூடுகளின் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாணவிகளுக்கும் ஒரு அளவிறகு வருவாய் கிடைத்துள்ளது


குருவிக்கூடுகளை எப்படி தயாரித்தீர்கள், விற்பனை செய்யும் எண்ணம் எப்படி வந்தது என குழந்தைகளிடம் பேசும்போது, தேங்காய் நார், நூல், பசை ஆகியவற்றை வைத்து குருவிக்கூடுகள் செய்து வருகிறோம். இந்த குருவிக்கூடுகள் 80 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். எங்களது குருவிக்கூடுகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் மாணவி சௌமியா



குழந்தைககள் தொழில்முனைவோராக மாறியுள்ளது குறித்து தாயார் தீபாவிடம் பேசினோம், நான் மில் தொழிலாளி. கொரோனா ஊரடங்கு காரணமாக மில்கள் மூடப்பட்டு விட்டதால், எங்கள் குடும்பத்தினர் வருவாய் இல்லாமல் இருந்து வந்தோம், அப்போது குழந்தைகள் விளையாட்டாக குருவிக்கூடு தயார் செய்து வீட்டில் வைத்தார்கள். குருவிகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து சென்றன. இதனையே ஒரு தொழிலாகச் செய்யலாம் என முடிவு செய்து குருவி கூடுகளை தயார்செய்து சாலையோரத்தில் வைக்கத் தொடங்கினோம். பொதுமக்களிடம் இருந்து எங்களின் குருவிக்கூடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. இந்த விற்பனையின் மூலம் ஊரடங்கு காலத்தில் எங்களது வறுமை நிலைமையை சமாளிக்க முடிந்தது என்றார்.