தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த கோவை, இன்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 854 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 3082 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 72 ஆயிரத்த 140 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 13728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 875 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2537ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 906பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 129 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 113191 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 108518 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 718 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 239 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 269 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 104277ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 99326 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1033 ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 224 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 124 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 36702 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34806ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது.