கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து வாலாங்குளம் வழியாக சுற்றி, மீண்டும் பந்தய சாலை பகுதியை அடையும் வகையில் 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார். அப்போது அவருடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். 38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதையை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.


வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடந்த வாரம் மதுரையில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்து பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. முதல்வர் 38 மாவட்டங்களில் பணிகள் துவங்கி வைக்க உள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், நேற்று முன்தினம் ரெகுலர் ரூம்க்கு வந்துள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவையில் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளது. தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை பந்தய சாலையில் சிறப்பாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணி மாநகராட்சி செய்து வருகிறது. கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அங்கு செல்ல உள்ளோம். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண