கோவை பீளமேடு பகுதியில் உள்ள டைடல் பார்க் அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “டைடல் பார்க் மற்றும் எல்கார்ட் ஆகிய இடங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கோவையில் அதிகமான வளர்ச்சி கொண்டு வருவதற்கான, புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. நிலம் வாங்கவும், புதிய கட்டிடங்களை கொண்டு வருவதற்கான வேலைகளையும் முதல்வர் அனுமதியுடன் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement

லூலு மால் அமைக்க செங்கல் கூட கொண்டு வர முடியாது என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இன்று லூலுமால் திறக்கபடுவது குறித்த கேள்விக்கு, ”லூலூ மால் கட்டி முடித்து  இருக்கின்றனர். இன்று தொடக்கப் போகிறோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜகவும், ஒன்றிய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.  ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்” எனப் பதிலளித்தார்.

Continues below advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, ”இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக திமுக வெளியே வரும். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வெளியே வருவார். திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் திமுக. கலைஞரின் வளர்ப்பு நாங்கள். தளபதியின் தம்பிகள் நாங்கள். இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதெல்லாம் சின்ன மேட்டர். நிறைய பார்த்து விட்டோம். செந்தில் பாலாஜி சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார். பதவியில் இருப்பதால் ஆடுகிறார்கள். திமுக மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு நற்பெயர் உருவாகி இருக்கிறது, அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளைக் கொண்டு சேர்க்கிறார். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொற்பமாக இருக்கிறது. முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதைக் கண்டு பயப்பட்டு, அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யார் என்பதை முதல்வர் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்” எனப் பதிலளித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண