பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் வரும் காலங்களில் பள்ளிகளில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், ”சி.எஸ்.ஆர் நிதி மூலமாக பல தன்னார்வ அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உதவிகளை செய்து வருகின்றன. இன்னும் அதிக உதவிகள் கிடைக்க பெரும். சி.எஸ்.ஆர் நிதி மூலமாக உதவிகள் கிடைக்க பெற அதற்கென்று தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும். அதன் மூலமாக இன்னும் முறையாக தேவைகேற்ப உதவிகள் கிடைக்கும்.
கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக சென்ற போது, பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்தது. பின்னர் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பாட வேண்டும். இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகப்படியான விழிப்புணர்வு இல்லை. பள்ளிகள் முழு வீச்சில், முழுமையாக திறந்த பிறகு அது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும். வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு அதற்கான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டு, முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உடனடியாக கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பாக அரசு அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல் நடவடிக்கையும் எடுத்து வருகிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: