அண்ணாமலை என்னுடன் விவாதிக்க தயாரா? மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி

”தமிழ்நாடு வளர்ச்சிக்கு அதிகம் பங்களித்து இருப்பது கம்யூனிஸ்டுகளா? பா.ஜ.க.வா? என அண்ணாமலை என்னுடன் விவாதிக்க தயாரா?” என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக, அதிமுக கட்சிகளை வீழ்த்துவதற்காக திமுக கூட்டணியில் உள்ளோம். அதிமுக பா..கவின் பி டீமாக செயல்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த அளவு வெற்றி கூட இந்த முறை அதிமுகவால் பெற முடியாது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

Continues below advertisement

கோவை, மதுரை தொகுதிகள்:

முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்ட போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத கட்சி அதிமுக. இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என ஏமாற்ற பார்க்கின்றது. அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.., அதிமுக எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது.

கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த இரு தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகளில் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும்.

விவாதிக்க தயாரா?

உண்மைக்கு மாறான விடயங்களை மோடி துவங்கி அண்ணாமலை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை. அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் பங்களித்து இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா, பா..கவா என பகிரங்கமாக விவாதிக்க தயார். தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது. சிறுகுறு தொழில் முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம். அருண் என்கிற விவசாய போராட்டத்தை ஒருங்கிணைந்த நபர் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற வேண்டும். திமுக கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். மதுரை,கோவை நாடாளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola