மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய அதன் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனிடம் ஜனநாயகம் இல்லை, அவர் சங்கியா குழுமம் சொல் படிதான் நடக்கிறார், நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு காது கொடுப்பதில்லை என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் பல பக்க அறிக்கைகளையும் தந்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறியவர் மகேந்திரன். அதன்பிறகு, தன்னுடைய அரசியல் எதிர்காலம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் பல மணி நேரம் ஆலோசித்திருக்கிறார். இந்த ஆலோசனைகளுக்க்கு பிறகு தான் திமுகவில் சேருவது என்று முடிவெடுத்து அந்த தகவலையும் தலைமைக்கு பாஸ் செய்திருக்கிறார். திமுவும் அவரை ”ஒன்றிணைவோம் வா”பாணியில் அழைக்க தயாராகிவிட்டதாக தெரிகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அப்பகுதியை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பு ஒன்று மகேந்திரனுக்கு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே விரைவில் ஆழ்வார்ப்பேட்டை மகேந்திரனை அறிவாலயத்தில் பார்க்கலாம்