கோவை மத்திய சிறையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். இதையடுத்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. சிறைக்கு வருபவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் செல்கையில் வாழ்வாதரத்தை மேம்படுத்தி  வருவாய் ஈட்டும் வகையில் செய்யப்பட்டு வருகிறது . 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பக அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் தகுதியான நபர்கள் விடுதலை செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் முதல்வர் அக்கறை கொண்டு முழு முயற்சி எடுத்து வருகிறார்” என அவர் தெரிவித்தார்.




கோவை மத்திய சிறைசாலை இட மாற்றம் செய்யபடுமா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி இங்கு செம்மொழி பூங்கா அமையும் என தெரிவித்து இருந்தார். இட மாற்றம் குறித்து அரசின் கவனதிற்க்கு கொண்டு செல்லபட்டு முதல்வரின் முடிவுக்கு விடபட்டு உள்ளது. மத்திய சிறைச்சாலை மாற்றபடும் பட்சத்தில் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். புதிய சிறைச்சாலை அமைந்திட இடம் கிடைப்பது கடினம். செம்மொழி பூங்காவிற்காக இந்த இடம் மாற்றபடாது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக  சிறைகள் அனைத்தும் புதுப்பிக்கபட்டு நவீன மயமாக்கபட வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட வேண்டும். எல்லா மத்திய சிறைச்சாலையில் திறந்த வெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.




எட்டு, பத்து, 12ம் வகுப்பு தேர்வுகள் எழுத சிறைவாசிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கபடுகின்றன. கல்லூரி பாடங்களுக்கு தேவையான பயிற்சிகள் பெறவும் ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. 14 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு 10 ஆண்டுகள் நிறைவு செய்து நன்னடத்தை காரணமாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாக கூறியவர் சிறை கடைகளில் உற்பத்தி கொரோனா காலகட்டத்தில் குறைந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளி சோதனை குறித்த கேள்விக்கு, ” அது குறித்து தான் பதில் அளிக்க முடியாது” என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஹெச் ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டும் இதுவரை கைது செய்யபடாதது குறித்த கேள்விக்கு, ”பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் நீதிமன்ற உத்தரவு போலீசாருக்கு கிடைக்க பெற வேண்டும். ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது” என அவர் பதிலளித்தார்.