ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு  செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு

இரவு 8.40 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு 11.15 மணிக்கு சென்றடையும், அதேபோல் அபுதாபியில் இருந்து திங்கள், புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவை வந்து அடையும், இந்த விமான சேவையானது ஈரான் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தினர் கூறுகையில்,  அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. ஈரான் போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் கோவை-  அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து  அந்த விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. விமான ரத்து செய்யப்பட்டதால் அதற்கான விமான டிக்கெட் கட்டணங்களை அனைத்தும் பயணிகளுக்கு திரும்பி வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்குள்ளாகியுள்ளனர்.