கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறுதோறும் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து கோவை போஸ்கோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.


திருப்பூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.  மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராகவும், ஒபிஎஸ் ஆதரவாளராகவும் இருந்தவர்.


கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு, நேற்று கோவை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல் விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், பிற ரகத்துக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வருகின்ற டிசம்பர் 1 ம் தேதி முதல் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


மழை குறைவு காரணமாக மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்து வருகிறது. 30 ஆயிரம் கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.


சேலத்தில் சிலிண்டர் வெடிப்பில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்ட் நிதியிலிருந்து வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் எம்.பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


சிலிண்டர் வெடிப்பில் உயிர் இழந்த பத்மநாபன் குடும்பத்திற்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே குழந்தையின் நெஞ்சில் ஏர் கன் குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த குழந்தை பெங்களூர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் காவல் துறையினர் சமரசப்படுத்தி கிழே இறக்கினர்.