கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளா. ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளில் இதர பணிகளை தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடி புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 இலட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் பேரில், மணி கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுரை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்சினி உத்தரவிட்டுள்ளார்.
போத்தனூர் – பாலக்காடு இரயில் பாதையில் இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க இரவு நேர கண்காணிப்பில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், தண்டவாள பகுதிகளில் வேலிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இரயில் மோதி வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் இரயில்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்பதை இரயில்வே நிர்வாகம் வன விலங்குகள் பாதுகாப்பு கருதி உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் சுகாதாரத் துறையினர் கண்காணொப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாகவும், தற்போது வரை புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட கிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 4 ½ அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரை ஆயுதங்களால் தாக்கி பணம் பறிக்க முயன்ற வழக்கில் இசக்கி பாண்டி, வானு பாண்டி, இசக்கி முத்து ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த 13 ம்தேட்ஜி டாஸ்மாக் விற்பனையாளர் சிதம்பரம் என்பவரை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.