கோவை இன்று 217-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தென்னிந்தியாவில் ஐந்தாவது பெரிய நகரம், தொழில் நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை, பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இடமாக உள்ளது.


தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் என தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை கொடிசியா அரங்கில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 52 நிறுவனங்களுடன் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான வாளையார் மனோஜ்க்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வாளையார் மனோஜ்க்கு, ஜாமீன் வழங்க யாரும் முன் வராததால் குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரந்தோறும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த வாரங்களில் கனமழை பெய்த நிலையில், தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.


குற்றவாளிகளை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து மாடல் வழங்கினார். சேலத்தில் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 10 வயது சிறுமி உள்பட  12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கேஸ் சிலிண்டர் விபத்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50,000 முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. வர்த்தக சிலிண்டர் வீடுகளில் வைத்து பயன்படுத்த வேண்டாம், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் இருளர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூ.5.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதன்சினி தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே ஓமியோபதி முடித்து, ஹலோபதி மருத்துவம் பார்த்து அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் க்ளினிக்கை மூடி, மருத்துவதுறை அதிகாரிகள் அதிகாரிகள் சீல் வைத்தனர். க்ளினிக் நடத்தி வந்த கிருஷ்ணசாமி தலைமறைவாகிய நிலையில், தேடி வருகின்றனர்.