கோவை அருகே சொத்து பிரச்சினை காரணமாக தம்பதியினர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை கே.ஆர்.காலனி பகுதியை சேர்ந்தவர் பாபு என்கிற சுப்பிரமணி. 50 வயதான இவர் நீலகிரி மாவட்டம் கோத்திகிரி பகுதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா(41). இவர்களுக்கு 6 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கும், ராதாவின் அண்ணனுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது குறித்து ராதா தனது அண்ணனிடம் கேட்ட பொழுது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் அவர் அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத போது சாணிச் பவுடரை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவினை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக பலியானார். இந்நிலையில் மனைவி ராதா தற்கொலை செய்து இறந்து விட்ட துக்கம் தாளாமல் கணவர் பாபு மன உடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாபுவும் சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து உறவினர்கள் காரமடை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


இந்த தகவலின் பேரில் காரமடை காவல் துறையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாபுவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்நிலையில் பாபுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இருவரது சடலமும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக இரு பெண் குழந்தைகளை விட்டு விட்டு மனைவி இறந்த நிலையில், துக்கம் தாளாமல் கணவரும் சாணிப் பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண