வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.



தொடர் மழை காரணமாக குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக வாலாங்குளம் நிரம்பியுள்ளது. இதன் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி சாலை புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் ஆறு போல ஓடி வருகிறது. வெள்ள நீர் அப்பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் வெள்ள நீர் வடியாததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையில் இன்றும் கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை அறிவிப்பு தாமதமாக வெளியிட்டப்பட்டதால், பல மாணவர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறை அறிவிப்பு தெரிந்த பின்னர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். தாமதமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காலை 7 மணியளவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டால் தான் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பொது மக்கள் தெரிவித்தனர். இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


https://bit.ly/2TMX27X


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


https://bit.ly/3AfSO89


ட்விட்டர் பக்கத்தில் தொடர


https://bit.ly/3BfYSi8


யூடிபில் வீடியோக்களை காண


https://bit.ly/3Ddfo32