கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பீளமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இணையதளம் மூலம் ஒரு குடியிருப்பில் பெண்கள் பாலியல் தொழிலுக்கு இருப்பதாக ஆன்லைனில் ஆசைகாட்டி, ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 29ம் தேதி தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில் புகுந்த ஒரு சில இளைஞர்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் எனவும், குடியிருப்பில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த காவல் துறையினர் ஆன்லைன் லோகேண்டா என்ற இணையதளத்தில் இளைஞர்கள் பாலியல் இச்சைக்காக பணத்தை கொடுத்தது ஏமாந்ததும் தெரியவந்துள்ளது.
இதனயடுத்து உதவி ஆணையர் சிலம்பரசன் மற்றும் காவல் ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இணையதளத்தை பயன்படுத்தி பாலியல் தொழில் செய்வதாக பெண்களை செல்போன் வாயிலாக பேச வைத்தும் பணத்தை சுருட்டிய 12 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெண்களை பாலியல் தொழிலுக்கு இருப்பதாக ஆன்லைனில் ஆசைகாட்டி பணமோசடி செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட இந்த கும்பல் பாலியல் தொழிலுக்கு பெண்கள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றிய கும்பலை மாநகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லோகேண்டா என்ற வலைதளத்தில் செல்போன் எண்களை பதிந்து ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இந்த கும்பலின் முக்கிய குற்றவாளி ரிஸ்வான் என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இணையதளம் மூலம் பணத்தை வசூலித்து விட்டு போலியான முகவரியை கொடுத்து வரச் செல்லி ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ரிஸ்வான் பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலுக்கும் ஈடுபடுத்தியுள்ளார். ஏமாற்றப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் 12 பேர் கைது செய்ய்பபட்டுள்ள நிலையில், அதில் 5 பெண்களும் அடக்கம். கோவையில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளோம். 360 டிகிரியில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில் கோவை பகுதிக்கு கொண்டு வருகின்றனர். கஞ்சா சாக்லேட் ராஜஸ்தானில் இருந்து வருகிறது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை காவல் துறையினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்