கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. மேலும் தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இப்பகுதி வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட கரியன் படுகை என்ற வனப் பகுதியில்  போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு  யானை உயிரிழந்தது கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணையில் உயிரிழந்தது  சுமார் 30 வயது உடைய ஆண் யானை என்பதும் உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும், இறந்த யானையின் உடலினை காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு சிதிலமடைந்த நிலையில் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். யானை தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானை தந்த வேட்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் வன உயிரின வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 தனிக் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




இந்நிலையில் இன்று வனத்துறை தனிக் குழுவினர் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை இறந்த பகுதியில் இருந்து சுமார் 430 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் யானை தந்தங்கள் இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.




யானை தந்தங்கள் வெட்டி எடுத்தவர்கள் முட்புதரில் தந்தங்களை மறைத்து வைத்திருக்கலாம் என வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.


https://bit.ly/2TMX27X


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


https://bit.ly/3AfSO89


ட்விட்டர் பக்கத்தில் தொடர


https://bit.ly/3BfYSi8


யூடிபில் வீடியோக்களை காண


https://bit.ly/3Ddfo32