கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் பகுதியில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் பகுதியில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்தது
சில தினங்களிக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் ஒரு பெண் யானை சுற்றி வந்தது. அந்த யானை உடல் மெலிந்த நிலையில், மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் யானையை மீட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த யானையும் உயிரிழந்தது. பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியே காரணம் என்பது தெரிவந்துள்ளது.
அண்மையில் 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் யானைகள் பாதுகாப்பு குறித்த கேள்வியை பொதுமக்களிடேயே எழுப்பியுள்ளது.