சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் CMRL நிறுவனம் கோயம்புத்தூரில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. CMRL சிஎம்ஆர்எல் லிமிடெட் எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் CMRL நிறுவனம் மாநில நெடுஞ்சாலை துறையோடு இணைந்து இந்த மேம்பால திட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.

கோயம்புத்தூரில் இரண்டடுக்கு மேம்பாலம் - Coimbatore Double Decker Flyover

கோல்டு வில்ஸில் இருந்து லீ மெரிடியன் ஹோட்டல் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதில் மேலடுக்கில் மெட்ரோ ரயில்கள் செல்லும் மற்றும் கீழடுக்கில் வழக்கம் போல பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போலவே கோயம்புத்தூரிலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தான் கோயமுத்தூரிலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது.

அவிநாசி முதல் சத்தியமங்கலம் சாலை வரை

இதற்கான ஆய்வு பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவிநாசி முதல் சத்தியமங்கலம் சாலை வரை என சுமார் 34.8 கிலோமீட்டர் தொலைவிற்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகி வருகிறது. இதில் முதல் கட்டமாக சத்தியமங்கலம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் மாநில தேசிய நெடுஞ்சாலை துறையோடு இணைந்து கோவையில் கோல்டுவின்ஸ் to லீ மெரிடியன் ஹோட்டல் வரையிலான 3 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் கீழ் தளத்தில் வழக்கம் போல பொது போக்குவரத்து தொடரும் என்று மேல் தளத்தில் மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டெடுக்கு பாலமாக கட்டுவதால் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கூடுதலாக நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என கூறப்படுகிறது. கோயம்புத்தூர் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்புக்கான பிரிவு பொறியாளர் மனுநீதி இந்த தகவலை தெரிவித்தார்.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி

தேசிய நெடுஞ்சாலையும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும் இணைந்து பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இருதரப்பிற்கும் கட்டுமான செலவு குறையும் எனவும் அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10 கிமீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர், இது மேலும் 5 கிமீ நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான நிலம் அளவீடு மற்றும் மண் பரிசோதனை பணிகளும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். கோயம்புத்தூரில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.