பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவிற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவை ஒட்டி, பாஜக மகளிர் அணி சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி ஹீராபென் மோடியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்தார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “பிரதமர் மோடியின் தாயர் 100 வது வயதில் மறைந்திருக்கிறார். பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஹீராபென் கடுமையான வாழ்க்கை பின்னனி கொண்டு, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.  மிகப்பெரிய உன்னத தலைவராக பிரதமர் மோடியை நாட்டிற்கு கொடுத்துள்ளார். பிரதமரின் பொது வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களுக்கும், சவால்களுக்கும் உத்வேகத்தை கொடுத்தவர் அவருடைய தாயார். இந்திய பெண்ணின் தவ வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார். 


இந்திய பெண்கள் ஊக்கமிகு வாழ்க்கை வாழ்வதற்கான எடுத்துக்காட்டாக ஹீராபென் வாழ்ந்துள்ளார். சாதாரண இந்திய பெண்மணிக்கு இருந்த சங்கடங்களும் சவால்களும் இவருக்கும் இருந்தது. பிரதமர் மோடி பல்வேறு சமையங்களில் எப்படி தன்னுடைய தாயாரின் பண்புகளும், வாழ்க்கையும் நெறிபடுத்தியது என்று ஊக்கபடுத்தியது என்று பல முறைமுறை கூறியுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உயர்ந்த மனிதர்களை, தவ புதல்வர்களை கொடுக்க முடியும் என்ற வாழ்க்கை ஹீராபென் வாழ்ந்து இருக்கிறார். இந்நேரத்தில் பிரதமருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு இருக்கும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், சமூக தலைவர்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். 


மாற்றுத்திறனாளி சங்கர் வரைந்த ஓவியம் குறித்து பேசிய அவர், “என்னுடைய தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிகழ்ச்சி நடத்தும் போது சந்தித்தேன். அவரின் திறமை வைத்து அவருக்கு உதவ நினைத்தேன். அவருக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் ஹீராபென் (100) இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஹீரா பென் இன்று அதிகாலை உயிரிழந்தார். மேலும் பிரதமரின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குஜராத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் குஜராத் செல்கிறார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண