கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக உள்ளது. இன்று இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பால் சென்னை முதலிடம் பிடித்ததால், கோவை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 224 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 875 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2306 ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் இன்று ஒரு இலட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 100214 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 98246 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 666 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 98 பேர் குணமடைந்துள்ள நிலையில், 934 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 91626 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89749 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 943 ஆக அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 27 பேர் குணமடைந்துள்ள நிலையில், 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 32220 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31677 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 196 ஆக உள்ளது.