தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 271 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 1426 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 19931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 3126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 214 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2578 ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் நேற்றைய தினத்தை விட இன்று 124 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 1023பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 8031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 129329 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 120573 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 725 ஆக உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1017 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 142 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1486 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 125746 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 113122 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1042 ஆக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 28 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 248 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 40908 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38554 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 224ஆக உள்ளது.