கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடித்து இருந்த நிலையில், கோவை இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 117 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 201 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2419 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 73 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 104374 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 102925 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 686 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 66 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 59 பேர் குணமடைந்துள்ள நிலையில், 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 95473 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 93742 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 22 பேர் குணமடைந்துள்ள நிலையில், 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 33585 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33186 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது.