கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வந்தது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 42 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி பாதிப்பு மீண்டும் 200 ஐ கடந்துள்ளது.

Continues below advertisement


கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 29 ஆயிரத்து 106 உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 13 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 1.9 ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 93532 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91495 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 633 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 2.0 ஆக அதிகரித்துள்ளது.




திருப்பூர் மாவட்டத்தில் இன்று 71 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 127 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 4 பேர்  உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 87723 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 85833 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 825 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 64 பேர் குணமடைந்துள்ள நிலையில், 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 30479 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29759 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 179 ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 1.5 ஆக உள்ளது.


கொரோனா தொற்று பாதிப்புகள் வெகுவாக குறைந்து வந்த நிலையில், கோவை, ஈரோட்டில் தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.