கரூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது அதிலும் குறிப்பாக பெண்களுக்கு என பிரத்யேகமாக பல்வேறு பள்ளிகள் இருக்கும் நிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட தேர் வீதி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் அதிக அளவில் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 




கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவை வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கரூர் நகராட்சிக்குட்பட்ட தேர் வீதி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சீரிய முயற்சியால் காம்பவுண்ட் சுவற்றில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.


அதிலும் குறிப்பாக அந்த ஓவியத்தில் கற்பதற்கு ஏழ்மை ஒரு தடை இல்லை எனவும் சுற்றுப்புறத் தூய்மையை எப்பொழுதும் மேன்மை எனவும், அதேபோல் தற்போது உள்ள பெண்கள் பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்னை தொட்டால் 181 என்ற வரிகள் அடங்கிய ஓவியங்கள் அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் வரையப்பட்டுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X 





இந்த ஓவியங்களும் அதிலுள்ள கருத்துக்களும் மாணவிகளுக்கு மற்றும் இல்லாது அப்பகுதியில் அதனை பார்த்து விட்டு கடந்து செல்லும் அனைவரையும் ஈர்த்து வருகிறது. கரூரில் மிகவும் புகழ்பெற்ற அரசு பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் தூய்மை மற்றும் கற்பதற்கு வயது தடையில்லை போன்ற வாசகங்கள் எழுதிய ஓவியங்களால் வருங்காலம் தலைமுறையும் அதனை உற்று நோக்கி வருகிறது. 




அரசு பள்ளியில் மாணவர்கள் பல்வேறு ஒழுக்கத்துடன் ஆசிரியர்கள் கல்வியைக் கற்பித்து வருவதற்கு இதுவே ஒரு சான்று என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 




பெரும்பாலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசுப்பள்ளி காம்பவுண்டு சுவற்றில் சினிமா பட விளம்பர போஸ்டர்களும் அரசியல் வியாபார விளம்பரம் உள்ளிட்ட வால் போஸ்டர்களால் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளித்த நிலை மாறி தற்போது வண்ண வண்ண ஓவியங்கள் பிரமிக்க வைத்துள்ள இத்தகைய பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளை சேர்த்தால் நல்லொழுக்கத்துடன் அவர்களுக்கு சிறந்த ஆற்றலையும் புதுவிதமான புத்துணர்ச்சியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.