கோயம்புத்தூர் நகரில், மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை, மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது நெடுஞ்சாலைத் துறை. 368 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம், கோவை நகரமே அடியோடு மாறப்போகிறது.

Continues below advertisement

ரூ.368 கோடியில் 12.5 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை

மொத்தம் 32.43 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த புறவழிச் சாலை திட்டம், கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளன.

இதற்காக, நெடுஞ்சாலைத்துறை, மாநில அரசிடம், 368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2-ம் கட்டமாக, மாடம்பட்டியிலிருந்து கணுவாய் வரையில், 12.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.

Continues below advertisement

இந்த சாலை, விவசாய நிலங்கள் வழியாக செல்வதால், சிறிய பாலங்கள், வடிகால்கள் இதில் கட்டப்பட உள்ளன. ஏற்கனவே 143 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முதல் கட்ட மணிகள் முடிவடைய உள்ளன.

“செப்டம்பருக்குள் முடிவடைய உள்ள பணிகள்“

கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டத்திற்காக, மீதம் உள்ள பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், இந்த ரிங் ரோடு பணிகள் விரைவில் முழுமையாக நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் துரிதமாக நடைபெறும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மேற்கு புறவழிச் சாலை, சேலம்-கொச்சி சாலையில் தொடங்கி, நாகப்பட்டினம்-கடலூர்-மைசூர் சாலையில், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடைகிறது. இந்த 4 வழிச் சாலை, மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

2023-ல் தொடங்கிய இந்த மேற்கு புறவழிச் சாலை(ரிங் ரோடு) பணிகளில், 60 சதவீதம் மாநில நெடுஞ்சாலைத் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் பணிகளால், மக்கள் பெரும் காத்திருப்பில் உள்ளனர்.

முழுமையான புறவழிச்சாலை எப்போது முடிவடியும்.?

இந்த மேற்கு புறவழிச்சாலை திட்டம், கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்கார்க்கப்படுகிறது. 2-ம் கட்ட சாலை, நகரின் மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் அமைகிறது.

மதுக்கரை, குனியமுத்தூர், பேரூர், மாதம்பட்டி போன்ற நகரின் மேற்குப் பகுதிகளை இச்சாலை இணைக்கும். மேலும், பொள்ளாச்சி சாலை, பாலக்கோடு சாலை, சிறுவாணி சாலை போன்ற முக்கிய மாநில, தேசிய நெடுஞ்சாலைகளையும் இது இணைக்க உள்ளது. இதனால், நகருக்குள் நுழையாமல், புறநகர் பகுதி வழியாகவே வாகனங்கள் சென்று வரும்.

மொத்தம் 3 கட்டங்களாக அமைக்கப்பட உள்ள இந்த புறவழிச் சாலையில், முதல் கட்டமாக, 11.80 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி வழியாக செல்லும் சாலை இந்த வருடம் முடிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 2-ம் கட்டத்தில், 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைய உள்ளது. 3-ம் கட்டத்தில், 8.52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையும் சாலை, பன்னிமடை, நஞ்சுண்டபுரம், குருடம்பாளையம் வழியாக செல்ல உள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் கூடலூர் இடையே அமைக்கப்பட உள்ள 4 வழிச் சாலையின் இருபுறமும், 9 மீட்டர் கேரேஜ் வழி மற்றும் 4 மீட்டர் அகலத்தில் செடிகள் கொண்ட மீடியனும் அமைக்கப்பட உள்ளது.