கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட 20அடி உயரம்கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
ஸ்மார்ட்சிட்டிதிட்டத்தின்கீழ்நாடுமுழுவதும்பல்வேறுநகரங்களில்பல்வேறுபணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்ஒருபகுதியாகமத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புஉடன், கோவைமாநகரில்1000 கோடிரூபாய்மதிப்பிலானபணிகள் செய்யப்பட்டு வருகின்றன.கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.ரூ.62.17 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளம், ரூ.67.86 கோடி மதிப்பில் வாலாங்குளம், ரூ.31.25 கோடி மதிப்பில் செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், ரூ.19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம், ரூ.52.16 கோடி மதிப்பில் குறிச்சி குளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அதில்பெரும்பாலானபணிகள்நிறைவடைந்துள்ளநிலையில், மீதமுள்ளபணிகளைவிரைந்துமுடிக்கும்பணிகளில்மாநகராட்சிநிர்வாகம்ஈடுபட்டுவருகிறது.
கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ளகுறிச்சி குளம்340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குஸ்மார்ட்சிட்டிபணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. தினமும் ஏராளமானோர் குளக்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் 20அடிஉயரம்கொண்டதிருவள்ளுவர்சிலைஅமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருவள்ளுவர்சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது.மேலும்சிலசொற்களும்இடம்பெறும்வகையில்இச்சிலைவடிவமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதனையடுத்து குளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதேபோல கோவை மாநகராட்சி சார்பில் குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார சின்னங்கள், பெரியகுளக்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனுபவ மையம் கட்டமைப்பு, ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகியவை நாளை பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
