கோவை பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் 15 போக்சோ வழக்குகள் பதிவானது - மாவட்ட எஸ்பி தகவல்

கடந்த ஆண்டில் மட்டும் புராஜெட் பள்ளிக்கூடம் மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். 35 பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "கடந்த 2023 ல் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் லைப் கார்டு, பள்ளிக்கூடம் 2.0, மிஷன் கல்லூரி, அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை என பல்வேறு திட்டங்களை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் விழுந்து சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கடந்த 2023 பிப்வரி மாதம் "லைப் கார்டு" என்ற பெயரில் மாவட்ட காவல் துறை சார்பில் 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.

Continues below advertisement

இந்த குழுவினர் கடந்த 2023 ல் மட்டும் ஆற்றில் தவறி விழுந்த 700 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற 11 பேரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் புராஜெட் பள்ளிக்கூடம் மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். 35 பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 1950 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 590 கைது செய்யப்பட்டு 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மட்டும் 189 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் 74 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 47 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் 5 கொலைகள் ஆதாய கொலை, இந்த வழக்குகளில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்குகளில் 89 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம், அதிகபட்சம் 3 நாட்களில் கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1558 பேருக்கு பிணையில் வெளிவராத வாரண்ட் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளோம்.

இந்த ஆண்டு விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்துள்ளது. சைபர் கிரைம் மூலம் ரூ.24 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர். மர்ம நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 31 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் நடத்தும் விழிப்புனர்வு நிகழ்ச்சி மூலம் 15 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ. 4.5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது. மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல் துறை சார்பில் விரைவில் மின் அறிவிப்பு இயந்தரம் பொருத்த உள்ளதாகவும், தற்போது கண்டறியப்பட்டுள்ள 19 இடத்தில் இந்த கருவிகளை பொருத்தி பவானி ஆற்றில் நீர் திறக்கும் போது முன்கூட்டிய அலாரம் ஒளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றக்கரையில் மீட்பு பணிகாக போடப்பட்ட காவலர்களுக்கு சிறப்பு நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement