Coimbatore Power Shutdown: தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (03.09.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

அதன்படி, கோவை வடக்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பகுதியான கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் நாளை (03.09.24) மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை மறுநாள் (04.09.24) எல்லப்பாளையம் பகுதியில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பகுதியான நீலாம்பூர் அருகே உள்ள முதலிபாளையம், பூணாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் தங்களின் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கோவை மாநகர மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் எங்கும் மின் தடை செய்யப்படாது. மின் தடை தொடர்பான அறிவிப்புகள் அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது. 

Continues below advertisement