Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (08.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

கவுண்டம்பாளையம்

அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர்

மாதம்பட்டி

1.மாதம்பட்டி 2.ஆலந்துறை 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்

தேவராயபுரம்

1.தேவராயபுரம் 2.போளுவாம்பட்டி 3.விராலியூர் 4.நரசிபுரம் 5.ஜே.என்.பாளையம் 6.காளியண்ணன்புதூர் 7.புதூர் 8.தென்னமநல்லூர் 9.கொண்டயம்பாளையம் 10.தென்றல் நகர்

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார்.

மருதூர்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை

பவானி தடுப்பணை

தேக்கம்பட்டி, சிக்கரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டதாசனூர்.