கோவையில் (05.06.25) பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை எங்கெங்கு மின் தடை ஏற்ப்படவுள்ளது என்பதை காணலாம். பொது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில், எந்தவித  தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்சார வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால்,  மின்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள், ஏற்படாதவாறு முன்னரே சரி செய்யப்படுவதற்கு இந்த பராமரிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

பராமரிப்பு:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புற்ப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், கோவையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் தடை ஏற்ப்படும் பகுதிகள்: 05.06.2026

சரவணம்பட்டி( காலை 9 மணி முதல்- மாலை 4 மணி வரை)

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜிஎன்மில், சுப்ரமணியம்பாளையம், கேஎன்ஜிபுதூர், மணியகரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயபிரகாஷ் நகர், லட்சுமி நகர், கணபதி நகர் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

செங்கத்துறை துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல்- மாலை 5 மணி வரை)

காங்கேயம்பாளையம், செங்கத்துறை, பி.என்.பி.நகர், மதியழகன் நகர், காடம்பாடி, ஏரோ நகர் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் தடை ஏற்ப்பட உள்ளதால் பொதுமக்கள் முன்னெரிச்சையாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான வேலைகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.